லைப் டைம் செட்டில்மெண்ட்: கமல் கடிதம் குறித்து நெகிழ்ச்சியுடன் லோகேஷ்
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ’விக்ரம்’ திரைப்படம் கடந்த வாரம் வெள்ளியன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் சுமார் 150 கோடி மூன்றே நாட்களில் வசூல் செய்தது என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றிக்கு லோகேஷ் கனகராஜின் திரைக்கதை மற்றும் இயக்கம் ஒரு முக்கிய காரணம் என்பதை அடுத்து அவருக்கு திரையுலகினர் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கமல்ஹாசன் தனது கைப்பட லோகேஷ் கனகராஜ்க்கு வாழ்த்துக்களை தெரிவித்து எழுதிய கடிதம் வைரலாகி வருகிறது. இந்த கடிதத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள லோகேஷ் கனகராஜ் இது எனது லைப் டைம் செட்டில்மெண்ட் என்று கூறியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:
அன்பு லோகேஷ், பெயருக்கு முன் திரு போடாமல் விட்டது விபத்தல்ல. திரு.கனராஜ் அவர்களுக்கு உங்கள் பால் உள்ள உரிமையை உங்களை கேட்காமலேயே நான் எடுத்துக் கொண்டுவிட்டேன். இது நமக்குள்ளான தனிப்பட்ட கடிதம் என்பதால். மற்றபடி உங்கள் சாதனைக்கான பதவிக்கான மரியாதை பழையபடியே தொடரும், பொதுவெளியில்,
என் ரசிகர்கள் மற்ற ரசிகர்களை விட வித்யாசமானவர்களாக இருப்பது அவசியம் என்ற என் ஆசை, பேராசை என்றனர் என் விமர்சகர்கள். ஆனால் அதையும் தாண்டி என் முன்னணி ரசிகர் முன்னணித் திறமையாளராகவும் இருப்பது நான் ஆசைப்பட்டதை விட அதிகம்.
உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை என்று நான் உட்பட யார் சொன்னாலும் நம்ப வேண்டாம். யூ டியூபைத் திறந்தால் வார்த்தைகளின் களஞ்சியமே தென்படும். அதில் உள்ள திரு லோகேஷ் கனகராஜ் தோத்திர மாலையிலிருந்து யார் வேண்டுமானாலும் வார்த்தை மலர்களை எடுத்து கொள்ளலாம்.
இவையெல்லாம் தொடர வாழ்த்துக்கள். அயராது விழித்திருங்கள், தனித்திருங்கள். பசித்திருங்கள் உங்கள் அன்ன பாத்திரம் என்றும் நிறைந்திருக்கும் உங்கள் நான்
இவ்வாறு கமல்ஹாசன் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
“Life time settlement letter”
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) June 6, 2022
Words can’t express how emotional I’m feeling reading this!
Nandri Andavarey @ikamalhaasan ???????????? pic.twitter.com/5yF4UnGnVj
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments