அஜித் படத்தை இயக்குவாரா லோகேஷ் கனகராஜ்? அவரே அளித்த பதில்..!

  • IndiaGlitz, [Saturday,October 14 2023]

’மாநகரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், அதனை அடுத்து விஜய், சூர்யா, கார்த்தி, என முன்னணி நடிகர்களை இயக்கும் அளவிற்கு தற்போது உச்சத்தில் உள்ளார். அடுத்த கட்டமாக அஜித் படத்தை அவர் இயக்க வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு அவரே அளித்த பதில் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

’மாநகரம்’ ’கைதி’ ’மாஸ்டர்’ ’விக்ரம்’ ஆகிய நான்கு திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கிய 5வது படமான ‘லியோ’ வரும் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படம் தமிழ் சினிமாவின் வசூல் சாதனையை புரட்டி போடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணியில் உள்ள லோகேஷ் கனகராஜ் அவர்களிடம் ஏற்கனவே ’உங்களது படத்தில் விஜய், சூர்யா, கார்த்தி, சஞ்சய் தத், அர்ஜுன் என பல முன்னணி நடிகர்கள் நடித்து விட்டார்கள், உங்களது பக்கெட் லிஸ்ட்டில், LCUவில் வேறு யாரெல்லாம் இணைந்து நடிக்க வாய்ப்பு இருக்கிறது என்று கேள்வி கேட்கப்பட்டது.

இந்த கேள்விக்கு ’எல்லோருடனும் இணைந்து பணிபுரிய வேண்டும் என்று தான் எனக்கு ஆசை, சின்ன வயதில் இருந்து அவர்களை எல்லாம் பார்த்து பார்த்து தான் வளர்ந்து இருக்கிறேன். தற்போது ரஜினியின் அடுத்த படத்தை இயக்க இருப்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது, அதேபோல் அஜித் அவர்களின் படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக இயக்குவேன்’ என்று கூறினார்.

இதனை அடுத்து லோகேஷ் இயக்கத்தில் அஜித் நடிப்பில் ஒரு படம் உருவாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

தண்ணீர் பிரச்சனையை அரசியலுடன் கலந்து பேசிய கமல்ஹாசன்.. பிக்பாஸில் இன்று சம்பவம் இருக்கு..!

பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்றும் நாளையும் கமல்ஹாசன் தோன்றும் எபிசோடு என்பதால் கூடுதல் விறுவிறுப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா-பாகிஸ்தான் போட்டியை நேரில் ரசிக்கும் 4 சூப்பர் ஸ்டார்கள்..!

கடந்த சில நாட்களாக உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்று முக்கிய போட்டியான இந்தியா - பாகிஸ்தான் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது

விசித்ரா, யுகேந்திரன், ரவீனாவை விட அதிக சம்பளம்.. ஆனால் இப்படி ஆயிருச்சே..!

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த இரண்டு வாரங்களாக விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் முதல் நாளிலிருந்து போட்டியாளர்கள் சண்டை சச்சரவுடன் விளையாடி வருகின்றனர்.

க்யூட்டாக மாட்டுப்பால் கறக்கும் தமிழ் சீரியல் நடிகை.. வைரல் வீடியோ..!

 தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் நடிகை தனது மாட்டு பண்ணையில் க்யூட் ஆக பால் கறக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  

'லியோ' ஐமேக்ஸ் பிரீமியர் காட்சிகள் திடீர் ரத்து.. இதுதான் காரணமா?

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் ஐமேக்ஸ் தொழில் நுட்பம் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இருந்தனர்.