'கைதி 2' படத்தின் கதையை மாற்றுகிறாரா லோகேஷ் கனகராஜ்? காரணம் ஆர்ஜே பாலாஜி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆர்ஜே பாலாஜி நடித்த ’சொர்க்கவாசல்’ என்ற திரைப்படம் வரும் 29ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை பார்த்த பிறகு ’கைதி 2’ படத்தின் கதையை மாற்ற வேண்டும் என்று ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் லோகேஷ் கனகராஜ் கூறினார்.
ஆர் ஜே பாலாஜி நடிப்பில் அறிமுக இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகிய ’சொர்க்க வாசல்’ திரைப்படம் நவம்பர் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசும்போது, "இந்த படத்தில் பணி புரிந்தவர்கள் அனைவருமே என்னுடைய நண்பர்கள். முதலில் படக்குழுவினர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். ட்ரெய்லர் மிகவும் நன்றாக இருந்தது. ஆறு மாதங்களுக்கு முன்பே இந்த படத்தின் சில காட்சிகளை பார்த்தேன். அப்போதே ஆர்ஜே பாலாஜி ஒரு நல்ல நடிகராக உருவாகிவிட்டார் என்று உணர்ந்தேன். ’கைதி 2’ படத்திலும் ஜெயில் காட்சிகள் உள்ளன, அதனால் ’சொர்க்கவாசல்’ படத்தில் ஆர் ஜே பாலாஜி என்ன செய்துள்ளார் என்பதை பார்த்துவிட்டு அதன் பிறகு ’கைதி 2’ கதையை மாற்ற வேண்டும் என்று சிரித்துக் கொண்டே கூறினார்," என்றார்.
சொர்க்கவாசல் திரைப்படத்தில் ஆர்ஜே பாலாஜி உடன் நட்டி நடராஜன், கருணாஸ், சானியா ஐயப்பன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ளார். சிறை வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படம் ரசிகர்களிடம் எப்படிப் பிரபலமாகும் என்பதை காத்திருப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com