close
Choose your channels

இதுக்காகத்தான் காத்திருந்தேன்.. இனிமேல் தொடர்ந்து அப்டேட் தான்: லோகேஷ் கனகராஜ்

Wednesday, January 11, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படம் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுவரும் நிலையில் இந்த படத்தை முதல் நாள் முதல் காட்சியை பல திரையுலக பிரபலங்கள் பார்த்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் விஜய் நடித்துவரும் ’தளபதி 67’ படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் இன்று ’வாரிசு’ படத்தை பார்த்தார். அவர் இதுகுறித்து செய்தியாளர்களிடம், ‘’வாரிசு’ திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்தது, நீண்ட இடைவேளைக்கு பிறகு குடும்பத்துடன் காண வேண்டிய ஜாலியான படமாக இருந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ரசிகர்கள் இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரசித்து பார்த்தார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் ’தளபதி 67’ படத்தின் அப்டேட் எப்போது வரும் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் ’வாரிசு’ படத்தின் ரிலீசுக்குதான் காத்திருந்தேன் என்றும் இனிமேல் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து பொங்கலுக்கு பின் ’தளபதி 67’ படத்தின் முதல் அப்டேட்டை எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.

லோகேஷ் சினிமா யுனிவர்ஸ் அடிப்படையில் உருவாகி வரும் ’தளபதி 67’ படத்தில் விஜய்யுடன் த்ரிஷா நடித்து வருவதாகவும் மேலும் சஞ்சய் தத், கெளதம் மேனன், அர்ஜூன் உள்பட பலர் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. அனிருத் திசையில் உருவாகி வரும் இந்த படத்தை லலித் தயாரித்து வருகிறார். இந்த படம் இந்த ஆண்டு தீபாவளி அன்று வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment