லோகேஷ் கனகராஜ் கொடுத்த 'தளபதி 67' படத்தின் மாஸ் அப்டேட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்து வரும் ’வாரிசு’ திரைப்படத்தின் செய்திகளை விட மிகவும் ஆர்வமாக ’தளபதி 67’ தகவல்களை தான் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த படத்தில் வில்லன்களாக மிஷ்கின், சஞ்சய்தத், அர்ஜூன், கெளதம் மேனன் ஆகியோர் நடிக்கவிருப்பதாகவும், அதேபோல் த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், சமந்தா ஆகியோர் நாயகிகளாக நடிக்கவிருப்பதாகவும் வெளிவந்துள்ள தகவல் இந்த படத்தின் எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
அதுமட்டுமின்றி கமல்ஹாசனின் ‘விக்ரம்’ என்ற மாபெரும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த லோகேஷ் கனகராஜ், ‘தளபதி 67’ படத்தை அதைவிட சூப்பராக கொடுப்பார் என்று ரசிகர் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே ’தளபதி 67’ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு எப்போது வரும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த லோகேஷ் கனகராஜ், ‘தளபதி 67’ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு டிசம்பர் மாதத்தில் எதிர்பார்க்கலாம் என்றும் அதன் பிறகு இந்த படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் வெளியாகும் என்றும் தெரிவித்தார். மேலும் தற்போது ’தளபதி 67’ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும் தான் ’கைதி’ திரைப்படம் வெளியாகி மூன்று வருடங்கள் ஆனதை ரசிகர்கள் கொண்டாடியது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் ’தளபதி 67’ படத்தை முடித்த உடன் ’கைதி 2’ படத்தின் படப்பிடிப்பு உடனடியாக தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
#EXCLUSIVE | ‘டிசம்பரில் தளபதி 67 அப்டேட் வரும்' - லோகேஷ் கனகராஜ்#SunNews | #Thalapathy67 | #Kaithi2 | @Dir_Lokesh pic.twitter.com/UU1C9ePZeV
— Sun News (@sunnewstamil) October 26, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments