லோகேஷ் கனகராஜ் கொடுத்த 'தளபதி 67' படத்தின் மாஸ் அப்டேட்!

தளபதி விஜய் நடித்து வரும் ’வாரிசு’ திரைப்படத்தின் செய்திகளை விட மிகவும் ஆர்வமாக ’தளபதி 67’ தகவல்களை தான் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த படத்தில் வில்லன்களாக மிஷ்கின், சஞ்சய்தத், அர்ஜூன், கெளதம் மேனன் ஆகியோர் நடிக்கவிருப்பதாகவும், அதேபோல் த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், சமந்தா ஆகியோர் நாயகிகளாக நடிக்கவிருப்பதாகவும் வெளிவந்துள்ள தகவல் இந்த படத்தின் எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

அதுமட்டுமின்றி கமல்ஹாசனின் ‘விக்ரம்’ என்ற மாபெரும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த லோகேஷ் கனகராஜ், ‘தளபதி 67’ படத்தை அதைவிட சூப்பராக கொடுப்பார் என்று ரசிகர் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே ’தளபதி 67’ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு எப்போது வரும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த லோகேஷ் கனகராஜ், ‘தளபதி 67’ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு டிசம்பர் மாதத்தில் எதிர்பார்க்கலாம் என்றும் அதன் பிறகு இந்த படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் வெளியாகும் என்றும் தெரிவித்தார். மேலும் தற்போது ’தளபதி 67’ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும் தான் ’கைதி’ திரைப்படம் வெளியாகி மூன்று வருடங்கள் ஆனதை ரசிகர்கள் கொண்டாடியது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் ’தளபதி 67’ படத்தை முடித்த உடன் ’கைதி 2’ படத்தின் படப்பிடிப்பு உடனடியாக தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

More News

மாலத்தீவு டூரை முடித்த அமலாபால்.. பிறந்த நாளை எங்கே கொண்டாடியிருக்கார் பாருங்கள்!

 நடிகை அமலாபால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாலத்தீவு சென்றார் என்பதும் அங்கிருந்து கொண்டு அவர் பதிவு செய்த சிங்கிள் பீஸ் பிகினி புகைப்படங்கள் உள்பட பல கிளாமர் புகைப்படங்கள் இணையத்தை

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும் புத்தம் புதிய வெப் சீரிஸ் - "ஜான்சி"

பல தரமான வெப் சீரிஸ்களையும், திரைப்படங்களையும் வழங்கி வரும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அடுத்ததாக வழங்கும் ஒரு புதிய

இதெல்லாம் ரொம்ப நக்கலு.. ஷெரினுக்கு வீடியோ வெளியிட்ட நெட்டிசன்ஸ்!

பிக்பாஸ் வீட்டில் தற்போது நடைபெற்று வரும் பொம்மை டாஸ்க்கின் மூலம் பல போட்டியாளர்களின் உண்மை சொரூபம் தெரிந்துவிட்டது. கடந்த இரண்டு வாரங்களாக ஒருசில போட்டியாளர்கள் தாங்கள் யார்

அடுத்த வாரத்தில் இருந்து சும்மா வெடிக்கும் பட்டாசுகள்:  'வாரிசு' படக்குழுவின் திட்டம் இதுதான்!

தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படத்தின் சூப்பர் ஸ்டில் ஒன்று கடந்த தீபாவளி அன்று வெளியானது என்பதும் அந்த ஸ்டில்லில் அடுத்த வாரம் முதல் பட்டாசு வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது

எங்க கை வச்சு தள்றான் தெரியுமா என்னை? ஆவேசமாகும் தனலட்சுமி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நடைபெற்று வரும் பொம்மை டாஸ்க்கில் இரண்டு குழுவினராக பிரிந்து ஒருவருக்கொருவர் மோதி வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.