close
Choose your channels

கோலிவுட் திரையுலகில் இதுதான் முதல் முறை.. 'தலைவர் 171' படம் குறித்து சூப்பர் அப்டேட்..!

Sunday, October 8, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 171வது திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் என்பதும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த லோகேஷ் கனகராஜ் ’தலைவர் 171’ படம் குறித்த சூப்பர் அப்டேட்டை தெரிவித்துள்ளார். விஜய் நடித்த ’லியோ’ திரைப்படத்தை நாங்கள் சாதாரண கேமராவில் படமாக்கி அதன் பிறகு ஐமேக்ஸ் தொழில் நுட்பமாக மாற்றினான்.

ஆனால் ’தலைவர் 171’ படத்தின் ஒரு சில காட்சிகளை நாங்கள் ஐமாக்ஸ் கேமராவில் படமாக்க திட்டமிட்டுள்ளோம். ’லியோ’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த மனோஜ் பரமஹம்சா தான் ’தலைவர் 171’ படத்திலும் பணிபுரிய உள்ளார் என்றும் அவர் 'தலைவர் 171’ படத்தின் சில காட்சிகளை ஐமாக்ஸ் கேமிராவில் படம் பிடிப்பார் என்றும் கூறியுள்ளார்.

எனவே தலைவர் 171’ படம் ஐமாக்ஸ் தொழில்நுட்பத்தில் உருவாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கோலிவுட் திரையுலகில் ஒரு திரைப்படம் ஐமேக்ஸ் கேமராவில் படமாக்கப்படுவது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment