close
Choose your channels

'நான் நினைத்தது நடக்கவில்லை': 'விக்ரம்' படத்தில் சூர்யா நடித்துள்ளது குறித்து லோகேஷ் கனகராஜ்!

Monday, May 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமலஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்து உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் இந்த தகவல் குறித்து நேற்று பேசிய லோகேஷ் கனகராஜ் இந்த விஷயத்தில் ’நான் நினைத்தது நடக்கவில்லை’ என்று கூறினார்.

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘விக்ரம்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் ரஜினிகாந்த், விஜய், சூர்யா உள்பட பல பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்கள் கலந்து கொள்ளாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது .

இந்த நிலையில் இந்த படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்து உள்ளதாக செய்திகள் வெளியானது மட்டுமின்றி அவர் ‘விக்ரம்’ படப்பிடிப்பில் கலந்து கொண்டதன் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது. இந்த நிலையில் ‘விக்ரம்’ ஆடியோ விழாவில் பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ‘‘விக்ரம்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் சூர்யா நடித்திருப்பது உண்மைதான் என்றும் ஆனால் இந்த விஷயத்தை படம் வெளிவரும்வரை ரகசியமாக வைத்திருக்க நினைத்திருந்தேன் என்றும், ஆனால் நான் நினைத்தது நடைபெறவில்லை என்றும் ஏற்கனவே இந்த தகவல் கசிந்து விட்டது என்றும் கூறினார்.

சூர்யா இந்த படத்தில் நடித்து இருப்பது குறித்து நடிகர் கமல்ஹாசன் பேசியபோது ’பல்வேறு பிஸியான பணிகளுக்கு இடையே சூர்யா எங்கள் படத்தில் வந்து நடித்து கொடுத்ததற்கு நன்றி’ என்று தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment