ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார் என எனக்கு முன்பே தெரியும்: லோகேஷ் கனகராஜ்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மருத்துவமனையில் செப்டம்பர் 30-ஆம் தேதி அனுமதிக்கப்படுவார் என்பது எனக்கு ஏற்கனவே தெரியும் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
'கூலி' படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் நாளில் செப்டம்பர் 30-ஆம் தேதி தனக்கு ஒரு சிகிச்சை இருக்கிறது என்று என்னிடம் ரஜினிகாந்த் அவர்கள் தெரிவித்தார் என்றும் அதனால் தான் அவருடைய காட்சிகளை செப்டம்பர் 28-ஆம் தேதிக்குள் நாங்கள் எடுத்து முடித்துவிட்டு அவரை அனுப்பிவிட்டோம் என்றும் எனவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது என்பது ஏற்கனவே திட்டமிட்டது தான் என்று லோகேஷ் கனகராஜ் கூறினார்.
ரஜினிகாந்த் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் வெளியான செய்திகளை பார்த்து எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது என்றும் இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒரு சிகிச்சை என்றும் ஆனால் யூட்யூபில் அல்லது சமூக வலைதளங்களில் பலர் என்னென்னவோ சொன்னது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது திடீரென ரஜினிகாந்த் அவர்களுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டிருந்தால் எங்கள் ஒட்டுமொத்த குழுவும் நாங்கள் மருத்துவமனையில் இருந்திருப்போம். ஆனால் எங்களுக்கு ஏற்கனவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது தெரியும் என்பதால் தான் நாங்கள் எங்கள் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தினோம்.
சன் பிக்சர்ஸ் போன்ற நிறுவனம் ஒரு பெரிய ஹீரோவுக்கு பிரச்சனை என்றால் உடனே படப்பிடிப்பை நிறுத்தச் சொல்வார்கள், ஆனால் அவருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது தெரியும் என்பதால் தான் தயாரிப்பு நிறுவனமும் படப்பிடிப்பு நடத்த பணம் வழங்கியது என்றும் அவர் கூறினார்.
40 நாட்களுக்கு முன்பே ரஜினிகாந்த் அவர்கள் மருத்துவமனைக்கு செல்வார் என்பது எங்களுக்கு தெரியும் என்பதால் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட செய்திகளை பார்க்கும்போது எங்களுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது என்றும் லோகேஷ் கனகராஜ் அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout