ரஜினி-கமல் இணையும் படம் குறித்து லோகேஷ் கனகராஜின் பதில்!

  • IndiaGlitz, [Monday,August 17 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ’மாஸ்டர்’ இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தகவல் வெளியானது

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ் ’இப்போதைக்கு இந்த படம் குறித்து நான் எதுவும் பதில் சொல்ல முடியாது என்றும், இன்னும் இந்த படம் குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றும், இந்த படம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் இந்த படம் குறித்த மற்ற விஷயங்களை தயாரிப்பு நிறுவனம் தான் சொல்ல வேண்டும் என்றும், இந்த படத்திற்கு இன்னும் நேரம் இருக்கிறது என்று நினைக்கிறேன் என்றும்கூறியுள்ளார்

மேலும் நான் எனது அடுத்த படத்தின் திரைக்கதையை தற்போது எழுத ஆரம்பித்துள்ளேன் என்றும், அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்தார்.

லோகேஷ் கனகராஜின் இந்த பதிலால் ரஜினி-கமல் இணையும் படம் இப்போதைக்கு இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது
 

More News

சென்னையில் டாஸ்மாக் திறக்கும் தேதி அறிவிப்பு!

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வந்ததால் டாஸ்மாக் கடைகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டது.

எஸ்பிபி குறித்த மகிழ்ச்சியான செய்தி தெரிவித்த எஸ்பிபி சரண்!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்

இவர்கள் தான் நிஜ ஹீரோக்கள்: சைலேந்திரபாபு வெளியிட்ட பரபரப்பு வீடியோ

தமிழ்நாடு தீயணைப்பு துறையின் ஐஜியாக இருக்கும் சைலேந்திரபாபு அவர்கள் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருவது தெரிந்ததே.

சூர்யா ரிலீஸ் செய்த டிரைலர்: 28ஆம் தேதி ஓடிடியில் வெளியீடு

தமிழகத்தில் கடந்த நான்கு மாதங்களாக கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன என்பதும்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்: அதிர்ச்சி தகவல்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.