கமல்ஹாசனுடன் இன்னொரு படம்.. உறுதி செய்த லோகேஷ் கனகராஜ்.. ஆனால் எப்போது?
- IndiaGlitz, [Monday,December 09 2024]
உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்’ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கிய நிலையில், சமீபத்தில் நடந்த திரைப்பட விழா ஒன்றில் கமல்ஹாசன் உடன் இன்னொரு படத்தில் இணைந்து பணியாற்ற இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் ’மாநகரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், அதன் பின் ’கைதி’, ’மாஸ்டர்’, ’விக்ரம்’, ’லியோ’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், கூலி படத்தை முடித்தவுடன் அவர் கைதி 2 படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த திரைப்பட விழாவில் கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசன் குறித்து பேசுகையில், கமல்ஹாசனை நேரில் பார்ப்பது எனக்கு ஒரு பெரிய கனவாக இருந்தது. ஆனால், அவரது திரைப்படத்தை இயக்கியது எனக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம். மீண்டும் ஒருமுறை அவருடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற இருக்கிறேன், என்று தெரிவித்துள்ளார். இதனால், விக்ரம் 2 பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கமல்ஹாசன் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள தக்லைஃப் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக, அன்பறிவு இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை முடித்ததும், அவர் லோகேஷ் கனகராஜின் படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#LokeshKanagaraj & #KamalHaasan Again Join 💥
— Movie Tamil (@MovieTamil4) December 8, 2024
This Combo Continue again
pic.twitter.com/wU3OD7da9P