இதுவரைக்கும் பார்க்காத விஜய்க்கு நான் கியாரண்டி: லோகேஷ் கனகராஜ்

  • IndiaGlitz, [Thursday,September 12 2019]

விஜய் நடித்து முடித்துள்ள ’பிகில்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடிக்க உள்ள ’தளபதி 64’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியின்போது தளபதி 64 படம் குறித்த சில குறிப்புகளை கூறியுள்ளார்

இதுகுறித்து அவர் கூறியதாவது: ’தளபதி 64’ படத்தை பற்றி தற்போது நான் பேசுவது சரியாக இருக்காது. இது ரொம்ப சீக்கிரம் என்று நினைக்கின்றேன். இந்த படத்தை பற்றியோ அல்லது இந்த படம் எந்த மாதிரியான ஜானர் படம் என்பதை பற்றியும் இப்போதைக்கு என்னால் சொல்ல முடியாது. ஆனால் விஜய் ரசிகர்களுக்கு என்னால் ஒரு விஷயத்தை மட்டும் உறுதியாக சொல்ல முடியும். இதுவரைக்கும் பார்க்காத விஜய்யையும் பார்க்காத விஜய் படமாகவும் இந்தப் படம் இருக்கும். அதுக்கு நான் கியாரண்டி என்று கூறியுள்ளார்

இந்த நிலையில் விஜய்64 படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பட்டியலை இறுதி செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்
 

More News

விஷாலின் ஆக்சன்' டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஷால், தமன்னா நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வந்த அதிரடி ஆக்சன் திரைப்படமான 'ஆக்சன்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக வெளிநாட்டில் நடைபெற்று

தளபதி ரசிகர்களின் விலையில்லா விருந்தகத்திற்கு பிரபல இயக்குனர் உதவி 

தளபதி விஜய்யின் பிறந்தநாள் கடந்த ஜூன் மாதம் கொண்டாடப்பட்ட நிலையில் அவருடைய பிறந்தநாளை ஒட்டி இந்த ஆண்டு முழுவதும் நூற்றுக்கணக்கான ஏழை மக்களுக்கு இலவச உணவு அளிக்கும்

பிகில்' இசை வெளியீடு தேதி அறிவிப்பு: காத்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் ஆச்சரியம்

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் உருவாகிவரும் 'பிகில்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில்

ஜிவி பிரகாஷ் அடுத்த படத்தின் இளமையான டைட்டில்!

ஜிவி பிரகாஷ் நடிப்பில் கடந்த வாரம் வெளியான 'சிவப்பு மஞ்சள் பச்சை' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அவர் நடித்து முடித்துள்ள நான்கு திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

பிக்பாஸ் வீட்டில் இன்று தர்ஷன் தினம்

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் தினமும் ஒவ்வொரு போட்டியாளரின் உறவினர்கள் வந்து சென்று கொண்டிருக்கின்றனர் என்பது தெரிந்ததே.