'விக்ரம்' படத்தின் புதிய ஸ்டில்லை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்!

  • IndiaGlitz, [Wednesday,August 11 2021]

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி உள்பட பலர் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தில் நாயகியாக ஆண்ட்ரியா நடிக்க இருப்பதாக கூறப்பட்டாலும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை.

இந்த நிலையில் ’விக்ரம்’ படத்தின் போஸ்டர்களை அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வரும் லோகேஷ் கனகராஜ், சற்றுமுன்னர் கமல்ஹாசன் திரையுலகில் நுழைந்து 62 ஆண்டுகள் ஆனதை அடுத்து புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

’விக்ரம்’ படத்தின் இந்த புதிய போஸ்டரில் கமல்ஹாசன் ரத்தக்கரையுடைய வாள் ஒன்றை தன் தோளில் சுமந்து இருப்பதுபோன்று அட்டகாசமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

More News

'அண்ணாத்த' பாணியில் 'டான்' ஷூட்டிங்ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்ட சூரி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' படத்தின் போஸ்டர் ஒன்று சமீபத்தில் வெளியானது என்பதும் ரஜினிகாந்த் மற்றும் சிறுத்தை சிவா ஆகிய இருவரும் லேசான இருளில் இருந்த அந்த புகைப்படம்

டார்ஜிலிங்கில் துருவ் விக்ரம்: வைரலாகும் அட்டகாசமான புகைப்படம்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சியான் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் ஆகிய இருவரும் இணைந்து நடித்து வரும் திரைப்படம் 'சியான் 60'. இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்த

ஜெர்மனி பெண்ணை ஏமாற்றிய புகார்....! ஆர்யா நேரில் ஆஜராகி விளக்கம்....!

திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி, பண மோசடி செய்த வழக்கில் ஆர்யா இன்று போலீசில் ஆஜராகி விளக்கமளித்துள்ளார்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு....! கூடிய சீக்கிரம் வழக்கை முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு....!

பொள்ளாச்சி பாலியல் வழக்கை தினமும் விசாரித்து, 6 மாதங்களுக்குள் இதை முடிக்க வேண்டும் என, கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உருவத்தை கிண்டல் செய்த நெட்டிசன்கள்....! 8 ஆயிரம் நபர்களை பிளாக் செய்த சீரியல் நடிகை....!

தன்னுடைய உருவத்தை கிண்டலடித்த, 8 ஆயிரம் நபர்களை பிளாக் செய்துள்ளதாக பிரபல சீரியல் நடிகை கூறியுள்ளார்.