கொரோனவால் பாதிக்கப்பட்ட லோகேஷ் கனகராஜ் எப்படி இருக்கிறார்? அவரே பதிவு செய்த டுவிட்!

  • IndiaGlitz, [Tuesday,April 06 2021]

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக தனது டுவிட்டரில் தெரிவித்து இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் சற்று முன் அவர் தனது டுவிட்டரில் மீண்டும் பதிவு செய்த டுவிட் ஒன்றில், தான் தற்போது கொரோனவில் இருந்து முழுமையாக குணம் அடைந்து விட்டதாகவும் தனக்காக வாழ்த்து தெரிவித்த, பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்

மேலும் இன்று தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை அடுத்து தான் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்ததாக லோகேஷ் கனகராஜ் வாக்களித்த விரல் மையுடன் கூடிய புகைப்படத்தையும் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து கொரோனவால் இருந்து மீண்ட லோகேஷ் கனகராஜ்க்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.