சூர்யா நடிக்க வேண்டிய படத்தில் விஜய்சேதுபதி? லோகேஷ் கனகராஜின் அதிரடி முடிவு
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருந்ததாக கூறப்பட்ட திரைப்படத்தில் தற்போது விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மணிரத்னம் உள்பட 11 இயக்குனர்களின் புதிய படநிறுவனம் ரெய்ன் ஆன் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் சமீபத்தில் தொடங்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிறுவனத்தின் பங்குதாரர்களாக பிரபல இயக்குநர்கள் மணிரத்னம், ஷங்கர், முருகதாஸ், வெற்றிமாறன், கவுதம்மேனன், லிங்குசாமி, மிஸ்கின், சசி, வசந்தபாலன், பாலாஜி சக்திவேல் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் உள்ளனர்.
இந்த நிறுவனத்தின் முதல் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்றும் அதில் சூர்யா நடிப்பார் என்றும் செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது திடீர் திருப்பமாக இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. விஜய் சேதுபதி ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ’மாஸ்டர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பதும் தற்போது ’விக்ரம்’ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments