லோகேஷ் கனகராஜின் அடுத்த ஐந்து படங்கள் இவை தான்..! 4 வருடங்கள் பிசியா?

  • IndiaGlitz, [Wednesday,July 19 2023]

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது தளபதி விஜய் நடித்த ’லியோ’ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ள நிலையில் அவரது அடுத்தடுத்த படங்கள் குறித்த தகவல் இணையத்தில் கசிந்து வருகின்றன

’லியோ’ படத்தின் ரிலீசுக்கு பின்னர் அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் படத்தை இயக்கவுள்ளார் என்பதும் இந்த படம் ரஜினியின் 171-வது படமாக உருவாகும் என்றும் கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் படத்தை முடித்தவுடன் கார்த்தியின் ’கைதி 2’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் என்பது சமீபத்தில் அளித்த பேட்டியில் உறுதி செய்யப்பட்டுள்ளது

இந்த நிலையில் ’கைதி 2’ படத்தை முடித்தவுடன் அவரது 10 வருட கனவு திரைப்படமான 'இரும்பு கை மாயாவி’ என்ற திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் அதில் சூர்யா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

’லியோ’ ‘தலைவர் 171’ ’கைதி 2’ மற்றும் ’இரும்பு கை மாயாவி’ ஆகிய 4 படங்களை முடித்தவுடன் ’விக்ரம்’ படத்தின் அடுத்த பாகத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. எனவே ஒரு படத்திற்கு ஒரு வருடம் என லோகேஷ் கனகராஜ் டைம் எடுத்துக் கொண்டாலும் இன்னும் நான்கு வருடங்களுக்கு அவர் பிசி என்பது தெரிய வருகிறது.