லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தை தயாரிக்கும் 9 திரையுலக பிரபலங்கள்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது கமல்ஹாசன் நடித்து வரும் ’விக்ரம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்ற நிலையில் அவருடைய அடுத்த படத்தை 9 திரை உலக பிரபலங்கள் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர்களான மணிரத்னம், ஷங்கர், முருகதாஸ், வெற்றிமாறன், கவுதம்மேனன், லிங்குசாமி, மிஷ்கின், சசி, வசந்தபாலன், பாலாஜி சக்திவேல் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகிய ஒன்பது பேர் இணைந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளனர்.

ரெயின் ஆன் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் (Rain On Films Pvt Ltd) என்ற பெயரில் உருவாகியிருக்கும் இந்த தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

தமிழ் திரையுலகில் முதல் முறையாக ஒன்பது பிரபல இயக்குநர்கள் இணைந்து ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ள நிலையில் இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல திரைப்படங்கள் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.