திடீரென காயமடைந்த லோகேஷ் கனகராஜ்.. கேரளாவில் என்ன நடந்தது?
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கேரளாவில் ’லியோ’ படத்தின் ப்ரோமோஷன் பணிக்காக சென்றிருந்த நிலையில் அங்கு அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக தெரிகிறது.
தளபதி விஜய் நடித்த ல’லியோ’ திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் உலகம் முழுவதும் ரூ.400 கோடி வசூல் செய்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கேரளாவில் உள்ள சில திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்கள் முன்னிலையில் தோன்றினார். அவருக்கு கேரளாவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இது குறித்து லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்த போது கேரளாவில் உள்ள ரசிகர்களை பார்த்து தனக்கு மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாகவும் குறிப்பாக பாலக்காட்டில் நல்ல கூட்டம் என்றும் அப்போது தனக்கு சின்ன காயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும் இரண்டு நகரங்களுக்கு செல்ல இருப்பதாகவும் அதன்பின் பத்திரிகையாளர்களை சந்திக்க இருப்பதாகவும் அவர் கூறினார். கேரளா ரசிகர்களை பார்க்க மீண்டும் விரைவில் வருவேன் என்றும் அவர் தெரிவித்தார்.
Thank you Kerala for your love.. Overwhelmed, happy and grateful to see you all in Palakkad. ❤️
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) October 24, 2023
Due to a small injury in the crowd, I couldn’t make it to the other two venues and the press meeting. I would certainly come back to meet you all in Kerala again soon. Till then… pic.twitter.com/JGrrJ6D1r3
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments