இன்று முதல்  'லியோ' அப்டேட் ஆரம்பம்.. விஜய் ரசிகர்களை குஷிப்படுத்திய லோகேஷ் கனகராஜ்..!

  • IndiaGlitz, [Sunday,September 17 2023]

தளபதி விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் நேற்று நடந்த திரைப்பட விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு ’விக்ரம்’ படத்திற்காக சிறந்த இயக்குனர் விருது கொடுக்கப்பட்டது. சென்ற ஆண்டு ’மாஸ்டர்’ படத்திற்காக சிறந்த இயக்குனர் விருது பெற்ற லோகேஷ் இந்த ஆண்டு ’விக்ரம்’ படத்திற்காக சிறந்த இயக்குனர் விருது பெற்றுள்ளார். இதையடுத்து அடுத்த ஆண்டு ‘லியோ’ படத்திற்காக சிறந்த இயக்குனர் விருதை பெறுவீர்கள் என்று தொகுப்பாளராக இருந்த நடிகர் சதீஷ் வாழ்த்துகளை தெரிவித்தார்.

இதற்கு நன்றி தெரிவித்த லோகேஷ் கனகராஜ் அதன் பின் ‘லியோ’ படத்தின் அப்டேட்டுகளை அதிக வேலை இருந்த காரணத்தால் வெளியிட முடியவில்லை என்றும் ஆனால் படம் ரிலீஸ் ஆவதற்கு 30 நாட்கள் முன்பே புரமோஷன் பணிகளை தொடங்க வேண்டும் என்ற திட்டமிட்டுள்ளோம் அதன்படி இன்று முதல் ‘லியோ’ அப்டேட் வெளியாகும் என்றும் தெரிவித்தார்.

இன்று முதல் அதாவது செப்டம்பர் 17 முதல் அடுத்தடுத்து ‘லியோ’ அப்டேட் வரும் என்று லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளதால் இனி விஜய் ரசிகர்களுக்கு இனி கொண்டாட்டம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அயர்லாந்து அம்மாவுடன் பிறந்த நாள் கொண்டாடிய அமலா.. வைரல் புகைப்படம்..!

நடிகை அமலா இன்று தனது 56வது பிறந்தநாளை தனது அயர்லாந்து நாட்டின் அம்மாவுடன் கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தில்லானா தில்லானா.. மீனாவின் நள்ளிரவு பிறந்த நாள் கொண்டாட்டம்.. யார் யார் வந்துருக்காங்க பாருங்க..!

நடிகை மீனா பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

'லியோ' படத்தை விஜய் பார்த்து என்ன சொன்னார் தெரியுமா? மிஷ்கின் சொன்ன முக்கிய தகவல்..!

தளபதி விஜய் 'லியோ' படத்தை பார்த்து விட்டதாகவும் நானும் இன்னும் ஒரு சில தினங்களில் பார்க்க இருக்கிறேன் என்றும் 'லியோ'  படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தவரும் பிரபல இயக்குனருமான மிஷ்கின் தெரிவித்து

ரஜினி, கமல், அஜித், விஜய்யை அடுத்து இன்னொரு பிரபலம்.. த்ரிஷாவுக்கு குவியும் வாய்ப்பு..!

நடிகை த்ரிஷா ஒரே நேரத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் ஆகிய நான்கு மாஸ் நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார் என்பதை பார்த்தோம்.

தனுஷின் 'D50' லுக் இதுவா? சரத்குமார்-ராதிகாவுடன் வைரல் புகைப்படம்..!

தனுஷ் நடித்து இயக்கி வரும் 'D50' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பதும் சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோவில் இந்த படத்துக்காக போடப்பட்ட பிரம்மாண்டமான