லோகேஷ் கனகராஜின் 10 நிமிட LCU குறும்படம்.. ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒரு படத்தில் உள்ள கேரக்டரை இன்னொரு படத்திற்கும் கொண்டு செல்வது மிகச்சில இயக்குனர்களுக்கு மட்டுமே கைவந்த கலை என்ற நிலையில் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய படங்களை முந்தைய படங்களின் கேரக்டர்களை கொண்டு வந்து அசத்தினார் என்பதும் அதனால்தான் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்று அவரது படங்கள் அழைக்கப்பட்டு வருகின்றன என்பது தெரிந்தது.
இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைத்தளத்தில் தன்னுடைய LCU கேரக்டர்கள் குறித்த பத்து நிமிட குறும்படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் அதற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது ரிலீஸ் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்
1 ஷாட், 2 ஸ்டோரீஸ், 24 ஹவர்ஸ் என்ற வாசகங்களுடன் சுற்றிலும் துப்பாக்கிகள் இருக்கும் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்தவுடனே ’ChapterZero’ என்ற இந்த பத்து நிமிட குறும்படத்தை பார்க்க வேண்டும் என்று ஆவல் அதிகரித்துள்ளது.
இந்த 10 நிமிடம் குறும்படத்தில் அவர் இயக்கிய ’மாநகரம்’ ‘கைதி’, ‘மாஸ்டர் ’விக்ரம்’ மற்றும் ’லியோ’ படத்தின் கேரக்டர்கள் இருக்கும் என்றும் குறிப்பாக கமல்ஹாசனின் விக்ரம், சூர்யாவின் ரோலக்ஸ், பகத் பாசிலின் அமர், விஜய்யின் லியோ, விஜய் சேதுபதியின் சந்தானம் கேரக்டர்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
ரஜினியின் ‘கூலி’ படத்தில் LCU கேரக்டர்கள் இல்லை என்றாலும் அவர் இயக்கவுள்ள ’கைதி 2’, ‘விக்ரம் 2’ உள்ளிட்ட மற்ற படங்களில் LCU கேரக்டர்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த பத்து நிமிட குறும்பட காட்சிகள் அதன் முன்னோட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
A teaching exercise that led to a ‘10 minute Prelude to the Origins of LCU’. #ChapterZeroFL unlock 💥@GSquadOffl X @cinemapayyan X @LevelUp_edu @anirudhofficial @anbariv @selvakumarskdop @philoedit @ArtSathees @PraveenRaja_Off @proyuvraaj pic.twitter.com/IXhVJB3bGn
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) October 25, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments