லோகேஷ் கனகராஜின் முதல் தயாரிப்பு.. அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஐந்து படங்களை மட்டுமே இயக்கிய லோகேஷ் கனகராஜ் புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார் என்பதை சமீபத்தில் பார்த்தோம். இந்நிறுவனத்தின் மூலம் அவர் தனது உதவியாளர்களுக்கும் நண்பர்களுக்கும் வாய்ப்பளிக்க இருப்பதாக கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் லோகேஷ் கனகராஜின் முதல் தயாரிப்பு திரைப்படத்தின் டைட்டில் உடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. லோகேஷ் கனகராஜ், ஜி ஸ்குவாட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார் என சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்நிறுவனத்தின் முதல் திரைப்படத்திற்கு ஃபைட் கிளப்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் நாயகனாக உறியடி விஜயகுமார் நடிக்கவிருக்கும் நிலையில் டைட்டில் உடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் அட்டகாசமாக வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
உரியடி, உறியடி 2 ஆகிய இரண்டு படங்களுக்கு பிறகு விஜயகுமாருக்கு இந்த படம் பெரும் திருப்புமுனை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்பாஸ் இயக்கத்தில், கோவிந்த் வசந்தா இசையில், லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவில் இந்த படம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் குறித்த அறிவிப்பு போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
#FightClub - The bravest gang will meet you all soon! 👊@Dir_Lokesh @Vijay_B_Kumar @reelgood_adi @Abbas_A_Rahmath @reel_good_films #GovindVasantha @editorKripa @leonbrittodp #kannanganpat @renganaath_R @VickyStunt_dir @sasivilliers. @EzhuArtdirector @Dinesh_1401… pic.twitter.com/HNMiOgs9es
— GSquad (@GSquadOffl) November 29, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments