சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படத்தில் லோகேஷ் கனகராஜ்.. மடோன் அஸ்வின் சொன்ன ஆச்சரிய தகவல்..!

  • IndiaGlitz, [Wednesday,June 21 2023]

சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘மாவீரன்’ திரைப்படத்தை இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி வரும் நிலையில் இந்த படத்திற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பல ஐடியாக்களை கொடுத்துள்ளதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

யோகி பாபு நடித்த ‘மண்டேலா’ என்ற தேசிய விருது பெற்ற திரைப்படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் தற்போது சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மாவீரன்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார் என்பதும் இந்த படம் ஜூலை 14ஆம் தேதி வெளியாக உள்ளது என்பதும் தெரிந்ததே. மேலும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதை அடுத்து இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இயக்குனர் மடோன் அஸ்வின் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகிய இருவரும் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் மடோன் அஸ்வின் கூறியபோது, ‘லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய் படத்தை இயக்கி வருவது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் 10 ஆண்டுகளாக பல குறும்படங்களை இயக்கியதை நான் பார்த்திருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

அவர் இந்த அளவுக்கு மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்தது எங்களுக்கெல்லாம் ஊக்கம் அளிக்கிறது என்றும் லோகேஷின் வளர்ச்சி எங்களுக்கு தூண்டுதலை உருவாக்கி உள்ளது என்றும் தெரிவித்தார். மேலும் ‘மாவீரன்’ படத்திற்காகவும் அவர் பல ஐடியாக்கள் கொடுத்து உள்ளார் என்றும் மடோன் அஸ்வின் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ள 'மாவீரன்’ படத்தில் மிஷ்கின், யோகி பாபு, சுனில் உள்பட பலர் நடித்து வருகின்றனர். மேலும் நடிகை சரிதா ஒரு முக்கிய குணச்சித்திர கேரக்டரில் நடித்துள்ளார். தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்து வருகிறார். விது அய்யனார் ஒளிப்பதிவில் ஃபிலோமின்ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.