'தளபதி 67' படத்தின் டெக்னீஷியன்கள் இவர்கள் தான்: செம ஆச்சரியத்தில் 'விக்ரம்' குழுவினர்!

தளபதி விஜய் தற்போது நடித்து கொண்டிருக்கும் ’வாரிசு’ படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் உடன் இணையாக இருக்கிறார் என்பதும் ’தளபதி 67’ என்ற இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ’தளபதி 67’ படத்திலும் லோகேஷின் முந்தைய படங்களின் தாக்கம் இருக்குமா? அல்லது தனித்துவமான படம் இருக்குமா? என்ற கேள்விக்கு இன்னும் ரசிகர்களுக்கு பதில் கிடைக்கவில்லை. ஆனால் அதே நேரத்தில் அவரது படங்களில் நடித்த அர்ஜுன் தாஸ், நரேன் உள்ளிட்டவர்கள் 'தளபதி 67’ படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் ‘விக்ரம்’ படத்தில் பணிபுரிந்த டெக்னீசியன்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி உள்ளது .அந்த தகவல் என்னவெனில் ‘விக்ரம்’ படத்தில் பணிபுரிந்த அனைத்து டெக்னீசியன்களும் ’தளபதி 67’ படத்திலும் பணிபுரிய உள்ளார்கள் என்பது தான்.

‘விக்ரம்’ படத்தில் பணிபுரிந்த ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன், இசையமைப்பாளர் அனிருத், படத்தொகுப்பாளர் பிலோமின்ராஜ் உள்பட அனைத்து டெக்னீசியன்களும் ’தளபதி 67’ படத்திலும் பணிபுரிய இருப்பதாகவும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் எடுத்த இந்த முடிவு ‘விக்ரம்’ டெக்னீசியன் குழுவினருக்கு செம ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.