நெருங்கிய நண்பரின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் லோகேஷ் கனகராஜ்.. வைரல் புகைப்படம்..!

  • IndiaGlitz, [Wednesday,May 10 2023]

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது நெருங்கிய நண்பர் ஆர்.ஜே பாலாஜியின் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது தனது பகுதிக்கான படப்பிடிப்பை அவர் முடித்து விட்டார் என்று செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

ஆர்ஜே பாலாஜி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’சிங்கப்பூர் சலூன்’. இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்றது என்பது தெரிந்ததே.இந்த நிலையில் இந்த படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாது. அவர் ஒரு ரியாலிட்டி ஷோவின் ஜட்ஜாக நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது ’சிங்கப்பூர் சலூன்’ திரைப்படத்தில் தனது பகுதியின் படப்பிடிப்பை லோகேஷ் கனகராஜ் முடித்துவிட்டார். இதுகுறித்த புகைப்படத்தை ஆர்ஜே பாலாஜி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளதை அடுத்து இந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.

ஆர்.ஜே.பாலாஜி, சத்யராஜ், லால், தலைவாசல் விஜய் உட்பட பலர் நடிக்கும் ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படத்தை கோகுல் இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே ‘ரெளத்திரம்’, ‘இதற்குத்தானேஆசைப்பட்டாய் பாலகுமாரா’,‘காஷ்மோரா’, ‘ஜுங்கா’, ‘அன்பிற்கினியாள்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். ஐசரி கே கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

இந்நிலையில் தற்போது விஜய் நடித்து வரும் ’லியோ’ என்ற படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக அனிருத்துடன் இணைந்து ஒரு படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.