எனது பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? லோகேஷ் கனகராஜ் கூறிய விளக்கம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் லோகேஷ் கனகராஜின் பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜின் பேஸ்புக் பக்கம் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டதாகவும் அதில் ஆபாச வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சில மணி நேரத்திற்கு முன்பு சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில், ‘எனக்கு ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய இரண்டு சமூக வலைதளங்களில் மட்டும் தான் கணக்கு இருக்கிறது. பேஸ்புக் உள்பட வேறு எந்த சமூக ஊடக கணக்குகளும் என்னிடம் இல்லை. எனவே தயவு செய்து எனது பெயரில் உள்ள போலி கணக்குகளை புறக்கணிக்கவும், அந்த கணக்குகளை பின்தொடர வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனை அடுத்து இன்று காலை ஹேக் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்கு லோகேஷின் போலி கணக்கு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Hey all, I’m only available on Twitter and Instagram, I do not have or use any other social media accounts. Please feel free to ignore and unfollow any other hoax accounts!
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) December 13, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com