லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல்!

’மாநகரம்’ மற்றும் ’கைதி’ ஆகிய இரண்டு படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மூன்றாவதாக தளபதி விஜய் படத்தை இயக்கும் மிகப்பெரிய வாய்ப்பை பெற்றார் என்பதும், விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கிய ‘மாஸ்டர்’ திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் வெளியானால் லோகேஷ் கனகராஜ் கோலிவுட்டில் முன்னணி இயக்குனர் பட்டியலில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த திரைப்படம் என்ன? என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வருகிறது. ரஜினிகாந்த் நடிப்பில் கமலஹாசன் தயாரிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வந்துள்ள புதிய செய்திகளின்படி தெலுங்கு முன்னணி நடிகர் ஒருவரின் படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் தெலுங்கு படமொன்றை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருப்பதாகவும், இந்த படத்தின் நாயகன் தெலுங்கின் முன்னணி நடிகர் என்றும் இது குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் இந்த படம் உருவாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

More News

'குட்டி ஸ்டோரி' பாடலுக்கு நடனம் ஆடிய 'பிகில்' நடிகை: வைரலாகும் வீடியோ

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு

கொரோனாவால் இருந்து குணமான தம்பதி தற்கொலை: அதிர்ச்சி காரணம்

உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் உடல்நலத்தை பாதிப்பதோடு, பெரும்பாலானோர்களுக்கு மன உளைச்சளையும் ஏற்படுத்தி வருகிறது என்பது குறித்த செய்திகளை பார்த்து வருகிறோம் 

பிக்பாஸ் தமிழ் நடிகை வெளியிட்ட ஹாட் வொர்க்-அவுட் வீடியோ

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் தங்களது சமூக வலைதளங்களில் ஹாட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர் என்பது தெரிந்ததே

பிச்சையெடுத்து தொழிலதிபரான வாலிபர்: ரூ.1 லட்சம் கொடுக்க விரும்பும் ராகவா லாரன்ஸ்

தினந்தோறும் பிச்சை எடுத்து அதில் கிடைத்த பணத்தை செலவு செய்தது போல மீதமுள்ள பணத்தை சேமித்து வைத்து இன்று டீ விற்பனை செய்யும் தொழில் அதிபராக மாறியிருக்கும் இளைஞர் ஒருவரின் தன்னம்பிக்கையை பாராட்டி

100% கல்வி கட்டணத்தை செலுத்த வலியுறுத்தினால் நடவடிக்கை: மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு

100% கல்வி கட்டணத்தை கட்ட வேண்டும் என மாணவ மாணவிகளின் பெற்றோர்களை வற்புறுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது