கமல் கொடுத்ததை விட இரு மடங்கு மதிப்பு.. லோகேஷ் கனகராஜ் வாங்கிய சொகுசு கார்..!

  • IndiaGlitz, [Thursday,August 17 2023]

கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ என்ற சூப்பர் ஹிட் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியதை அடுத்து அவருக்கு கமல்ஹாசன் 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லெக்சஸ் கார் ஒன்றை பரிசாக அளித்தார். இந்த நிலையில் தற்போது ’லியோ’ படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள லோகேஷ் கனகராஜ் ரூ.1.70 கோடி மதிப்பில் பிஎம்டபிள்யூ சொகுசு கார் வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் வெற்றிப்பட இயக்குனராக லோகேஷ் கனகராஜ் வலம் வந்து கொண்டிருக்கிறார். அவர் இயக்கிய ’மாநகரம்’ ’கைதி’ ’மாஸ்டர்’ ’விக்ரம்’ ஆகிய நான்கு படங்களும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது என்பதும் ஐந்தாவது படமான ‘லியோ’ படமும் நிச்சயம் வெற்றி பெறும் என்றும் கூறப்படுகிறது

இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது ரூபாய் 1.70 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார் வாங்கி உள்ளார். இந்த கார் ஸ்டார்ட் ஆன ஐந்து வினாடிகளில் 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் என்றும் மொபைல் போன் மூலம் காரை ஸ்டார்ட் செய்யவும் நிறுத்தவும் முடியும் என்றும் கூறப்படுகிறது.

இந்த காருடன் லோகேஷ் கனகராஜ் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.