close
Choose your channels

11 இயக்குனர்களின் தயாரிப்பில் முதல் படம்: ஹீரோ இந்த பிரபலமா?

Thursday, August 26, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர்கள் பதினோரு பேர் இணைந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி உள்ளார்கள் என்றும் இந்த நிறுவனத்தின் முதல் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நாயகன் யார் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

பிரபல தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனரான மணிரத்னம், ஷங்கர், முருகதாஸ், வெற்றிமாறன், கவுதம்மேனன், லிங்குசாமி, மிஷ்கின், சசி, வசந்தபாலன், பாலாஜி சக்திவேல், மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இணைந்து ரெயின் ஆன் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளனர்.

இந்த தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள நிலையில் இந்த படத்தின் ஹீரோவாக சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. ஏற்கனவே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் மற்றும் கமல்ஹாசன் ஆகிய படங்களை இயக்கிய நிலையில் தற்போது அடுத்ததாக சூர்யா படத்தை இயக்கி இருப்பது கோலிவுட் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment