close
Choose your channels

ஒரே படத்தில் சிவகார்த்திகேயன் - லோகேஷ் கனகராஜ்.. வேற லெவல் தகவல்..!

Wednesday, August 7, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய் என மாஸ் நடிகர்களின் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக சிவகார்த்திகேயன் படத்தில் பணிபுரிய இருப்பதாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் ’புறநானூறு’ என்ற திரைப்படத்தில் சூர்யா நடிக்க இருந்த நிலையில் அவர் அந்த படத்தில் இருந்து விலகியதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் இந்த படத்தில் கதையின் திருப்புமுனையை ஏற்படுத்தும் கேரக்டரில் நடிக்க லோகேஷ் கனகராஜ் இடம் சுதா கொங்கரா பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அதற்கு அவரும் ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுவதை அடுத்து சிவகார்த்திகேயன் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகிய இருவரும் ’புறநானூறு’ திரைப்படத்தில் நடிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

’புறநானூறு’ படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அப்போது சிவகார்த்திகேயன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து நடிப்பது குறித்த தகவலும் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment