லோகேஷ் கனகராஜ் படம் இயக்குவதை விட்டுவிடலாம்.. என்ன ஒரு கெமிஸ்ட்ரி.. 'இனிமேல்' ஆல்பம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் என்ற இடத்தை பிடித்துள்ள லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் உடன் இணைந்து நடித்த ’இனிமேல்’ என்ற ஆல்பம் வெளியாகி உள்ள நிலையில் லோகேஷ் இனிமேல் படம் இயக்குவதை விட்டுவிட்டு தாராளமாக ஹீரோவாக நடிக்கலாம் என்றும் அந்த அளவுக்கு அவரது நடிப்பு சூப்பராக இருப்பதாகவும் சற்று முன் வெளியான ‘இனிமேல்’ என்ற ஆல்பத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.
உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் அவர் எழுதிய பாடலை ஆல்பமாக ஸ்ருதிஹாசன் உருவாக்கி உள்ளார். இந்த ஆல்பத்தில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடித்துள்ள நிலையில் அவர்கள் இருவரது கெமிஸ்ட்ரியை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
வெறும் ஐந்து நிமிடமே உள்ள இந்த ஆல்பத்தில் ஆரம்பக் காட்சிகளில் உள்ள காதல், கெமிஸ்ட்ரி, அதன் பின் திருமணம் மற்றும் முதலிரவு, அதன் பின்னர் தம்பதிகளுக்குள் ஏற்படும் சின்ன சின்ன சண்டைகள், அதனால் ஏற்படும் பிரிவுகள், விவாகரத்து வரை செல்லும் நிலை, அதன்பின் ஒரு சின்ன புரிதலில் இருவரும் மீண்டும் இணைதல் ஆகியவற்றை மிக அழகாக காட்சிப்படுத்தி உள்ளார்கள்
கமல்ஹாசனின் ஆழமான அழுத்தமான கருத்துள்ள பாடல் வரிகள் இந்த ஆல்பத்தில் ஸ்பெஷல் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் கெமிஸ்ட்ரி மிக சிறப்பாக இருப்பதாகவும், பேசாமல் படங்கள் இயக்குவதை விட்டுவிட்டு லோகேஷ் தாராளமாக முழுநேர நடிப்பிற்கு வந்து விடலாம் என்றும் கூறி வருகின்றனர்
மொத்தத்தில் இந்த ஆல்பம் மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்டிருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments