ஒரேயடியாக உயர்ந்த லோகேஷ் - நெல்சன் சம்பளம்? கமல், ரஜினி, விஜய் படங்களால் உச்சம்..!
- IndiaGlitz, [Friday,September 01 2023]
உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ மற்றும் தளபதி விஜய் நடித்த ‘லியோ’ ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜின் சம்பளம் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ படத்தை இயக்கிய நெல்சன் சம்பளம் உச்சத்துக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் திரைப்படம் 300 கோடி வசூலைத் தாண்டியது என்பது தெரிந்ததே. மேலும் தற்போது அவர் இயக்கி இருக்கும் ’லியோ’ திரைப்படத்தின் வசூல் ரூ.1000 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவான ’ஜெயிலர்’ திரைப்படம் ரூ.500 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது. இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் ஆகியோர்களின் அடுத்த படங்களுக்கான சம்பளம் ஒரேடியாக உயர்ந்துள்ளதாக தெரிகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ’தலைவர் 171’ திரைப்படத்திற்கு அவருக்கு சம்பளம் ரூ. 60 கோடி சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் ’ஜெயிலர்’ படத்தை அடுத்து மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக நெல்சன் ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் அந்த படத்திற்கு அவருக்கு ரூ.55 கோடி சம்பளம் என்றும் கூறப்படுகிறது.
கமல், ரஜினி, விஜய் படங்களை இயக்கியதால் இரண்டு இளம் இயக்குனர்களின் சம்பளம் உச்சத்துக்கு சென்றுள்ளதை கோலிவுட் திரையுலகம் ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறது.