லோகேஷ் கனகராஜ், அனிருத் ஹீரோக்களாக நடிக்கிறார்களா? இது என்ன புது கதையா இருக்கு?
- IndiaGlitz, [Thursday,April 13 2023]
பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் பிரபல இசையமைப்பாளர் அனிருத் ஒரு திரைப்படத்தில் ஹீரோ கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இயக்க இருப்பதாகவும் செய்திகள் பரவி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய் நடித்து வரும் ’லியோ’ படத்தை இயக்கி வருகிறார். இதனை அடுத்து அவர் ’கைதி 2’ ரஜினிகாந்த் படம், கமல்ஹாசனின் ’விக்ரம் 3’ உள்ளிட்ட படங்களை இயக்க திட்டமிட்டுள்ளார்.
அதேபோல் தமிழ் திரை உலகின் பிஸியான இசையமைப்பாளர் என்றால் அது அனிருத் தான். அவர் ஏற்கனவே தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தி படங்களுக்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்றும் பாடல்கள் கம்போஸ் செய்யவே அவருக்கு நேரமில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவ் இயக்க இருக்கும் திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் நடிக்க இருப்பதாகவும் இதற்கான பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது போக போகத்தான் தெரியும்.
ஏற்கனவே ஆர்ஜே பாலாஜி நடிப்பில் உருவாகி வரும் ’சிங்கப்பூர் சலூன்’ படத்தில் லோகேஷ் கனகராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அவரால் ஒரு முழு திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க முடியுமா என்பதை அறிவிப்பு வரும் வரை பொறுத்து இருந்து பார்ப்போம்.