close
Choose your channels

விஜய் அண்ணாவின் பிறந்த நாளில் வெளியாவது இதுதான்: லோகேஷ் செம்ம அப்டேட்..!

Friday, June 16, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய்யின் பிறந்தநாள் வரும் 22 ஆம் தேதி கொண்டாட இருக்கும் நிலையில் அன்றைய தினம் விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் இந்த தகவலை லோகேஷ் கனகராஜ் சற்று முன் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

ஜூன் 22ஆம் தேதி விஜய் அண்ணாவின் பிறந்தநாளில் ‘நான் ரெடி’ என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகும் என்று அவர் அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி கையில் துப்பாக்கி உடன் வாயில் சிகரெட் உடன் அட்டகாசமாக விஜய் இருக்கும் போஸ்டரையும் அவர் வெளியிட்டுள்ள நிலையில் இந்த கலர்ஃபுல் போஸ்டர் தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய்யின் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கிய நிலையில் தற்போது புரமோஷன் பணிகளையும் படக்குழுவினர் தொடங்கிவிட்டனர் என்பதே இந்த அறிவிப்பு காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் பாடிய இந்த பாடல் வழக்கம் போல் மிகப் பெரிய ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் ‘லியோ’ படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment