பேட்டியை பார்த்து 'லியோ' படத்தில் பிரபல நடிகரை இணைத்த லோகேஷ்.. மாஸ் தகவல்..!

  • IndiaGlitz, [Sunday,August 13 2023]

சமீபத்தில் பிரபல நடிகர் ஒருவர் லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க தான் மிகவும் ஆர்வமாக இருப்பதாக கூறி இருந்த நிலையில் அந்த பேட்டியை பார்த்த லோகேஷ் கனகராஜ் ‘லியோ’ படத்தில் அவருக்காகவே ஒரு கேரக்டரை உருவாக்கி உள்ளதாகவும் இதையடுத்து அவர் இந்த படத்தில் நடித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லியோ’ படத்தில் ஏற்கனவே பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. விஜய் உடன் த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்தில் பாலிவுட் பிரபலம் அனுராக் காஷ்யப் இணைந்துள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகி உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவர் அளித்த பேட்டியில் லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க தனக்கு விருப்பம் இருந்தாலும் அவர் பிரபலங்களுக்கு கொடுக்கும் கேரக்டரை கொன்று விடுவார் என்று பேட்டி அளித்திருந்தார்.

இந்த பேட்டியை பார்த்தவுடன் லோகேஷ் கனகராஜ், அனுராக் அவர்களுக்கு என ஒரு கேரக்டரை உருவாக்கி அந்த கேரக்டரை 'லியோ’ படத்தில் இணைத்துள்ளதாக தெரிகிறது.

'லியோ’ படத்தில் தான் இணைந்தது மிகவும் மகிழ்ச்சி என்றும் லோகேஷ் உடன் பணிபுரிந்தது சிறப்பான அனுபவமாக இருந்தது என்றும் அனுராக் கூறியுள்ளார். இதனை அடுத்து அனுராக் காஷ்யப் இந்த படத்தில் இணைந்து உள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.