'ஃபைட் கிளப்' படத்தின் 'யாரும் காணாத' மெலோடி பாடல்.. நெகிழ வைத்த கோவிந்த் வசந்தா..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள ’ஃபைட் கிளப்’ என்ற திரைப்படம் வரும் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதை பார்த்தோம்.
‘உறியடி’ விஜயகுமார் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் கார்த்திகேயன் சந்தானம், சங்கர் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையில் அப்பாஸ் ரஹ்மத் இயக்கத்தில் உருவாகிய இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் சற்றுமுன் ‘யாரும் காணாத ’என்ற வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.
கோவிந்த் வசந்தா வசந்தாவின் நெகிழ்வான மெலோடி பாடல் ஆன இந்த பாடல் முதல் முறை கேட்கும் போதே அசத்தலாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கார்த்திக் நேத்தா எழுதிய இந்த பாடலை கபில் கபிலன், கீர்த்தனா வைத்தியநாதன் ஆகியோர் பாடியுள்ளனர். இந்த பாடலின் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Here's the #YaarumKaanadha Video Song - first single from #FightClub 👊https://t.co/gkqi2NRxwg
— GSquad (@GSquadOffl) December 8, 2023
A #GovindVasantha Musical@Dir_Lokesh @Vijay_B_Kumar @reelgood_adi @Abbas_A_Rahmath @reel_good_films @GSquadOffl@mytrimonisha #GovindVasantha@SonyMusicSouth @SakthiFilmFctry… pic.twitter.com/IDJoCBfSZ7
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com