இந்த அன்பிற்கு என்ன திருப்பி தர போகிறேன்: லோகேஷ் டுவிட்டுக்கு கமல் பதில் என்ன தெரியுமா?

'இந்த அன்பிற்கு நான் என்ன திருப்பித் தரப் போகிறேன் என்று எனக்கு தெரியவில்லை’ என்று உணர்ச்சிவசப்பட்டு லோகேஷ் கனகராஜ் பதிவு செய்துள்ள டுவிட்டுக்கு கமல்ஹாசன் முதிர்ச்சியுடன் தனது டுவிட்டரில் பதில் அளித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ’விக்ரம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது. படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் உலகம் முழுவதில் இருந்து குவிந்து வரும் நிலையில் லோகேஷ் கனகராஜ் உணர்ச்சிவசப்பட்டு டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

நான் எப்போதும் இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டதில்லை. விக்ரமுக்கும் எனக்கும் நீங்கள் கொடுத்த வரவேற்பு என்னை மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்திருக்கிறது. நீங்கள் தந்த அன்பிற்கு கைமாறாக நான் என்ன திருப்பித்தரபோகிறேன் என்று தெரியவில்லை. இதை எனக்கு ஏற்படுத்திக்கொடுத்த கமல்ஹாசன் சாருக்கும், என்னுடைய மக்களுக்கும் என்றும் நான் நன்றியுடையவனாக இருப்பேன். நான் நெகிழ்ந்து விட்டேன். லவ் யூ ஆல்.

லோகேஷின் இந்த ட்வீட்டுக்கு பதிலளித்துள்ள கமல்ஹாசன், ‘நீங்கள் செய்யக்கூடிய ஒரே விஷயம் என்னவெனில் ஒருபோதும் மனநிறைவை அடையாமல் இருப்பது தான்! நேர்மையாக உங்கள் வேலையை செய்யுங்கள், அப்படி செய்தால் மக்கள் அதை நேசிப்பார்கள், மதிப்பார்கள். உங்களது அனைத்து முயற்சிகளுக்கும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் ஆதரவு எப்போதும் உண்டு’ என்று தெரிவித்துள்ளார். இந்த இரண்டு பதிவுகளும் தற்போது வைரலாகி வருகிறது.