த்ரிஷா குறித்து மன்சூர் அலிகானின் சர்ச்சை கருத்து.. லோகேஷ் கனகராஜின் ரியாக்சன்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் பேட்டி அளித்த போது த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். ’லியோ’ படத்தில் இணைந்து நடித்தாலும் இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் இல்லை என்று கூறிய அவர் மேலும் சில சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மன்சூர் அலிகானின் இந்த கருத்துக்கு நடிகை த்ரிஷா தனது சமூக வலைதளத்தில் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் நெட்டிசன்களும் அவருக்கு கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்
இந்த நிலையில் ’லியோ’ படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைத்தளத்தில் இது குறித்து தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். ’நாங்கள் அனைவரும் ஒரே படத்தில் இணைந்து பணியாற்றினோம். ஆனால் மன்சூர் அலிகான் கூறிய பெண் வெறுப்பு கருத்துக்களை கேட்டு மனமுடைந்த கோபமடைந்தேன். பெண்கள் உட்பட சக கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு மரியாதையை கண்டிப்பாக கொடுக்க வேண்டும். மன்சூர் அலிகானின் இந்த நடத்தையை நான் உண்மையில் கண்டிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மன்சூர் அலிகான் மீது லோகேஷ் கனகராஜ் மிகுந்த மரியாதை வைத்திருந்தார் என்பதும் அவரை முக்கிய கேரக்டரில் நடிக்க வைத்து ஒரு படத்தை இயக்க திட்டமிட்டு இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன் கூறியிருந்தார். ஆனால் இனிமேல் மன்சூர் அலிகானை லோகேஷ் தனது படத்தில் அவர் பயன்படுத்துவாரா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments