ஓம் நமசிவாயா: 'மாஸ்டர்' இயக்குனரின் வைரலாகும் டுவீட்!

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் வரும் 13ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தை எதிர்நோக்கி கோடிக்கணக்கான விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் ஒரு பக்கம் படக்குழுவினர் புரமோஷன் பணிகளை செய்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘மாஸ்டர்’ திரைப்படம் வெற்றிபெற திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார். அவருடன் ‘மாஸ்டர்’ படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தும் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாமி தரிசனம் முடிந்தபின் கோவிலின் முன் விபூதி குங்குமப் பொட்டுடன் லோகேஷ் கனகராஜ், அனிருத் அனைத்து உள்பட படக்குழுவினர் நிற்கும் புகைப்படத்தை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் லோகேஷ் கனகராஜ். மேலும் அதில் ’ஓம் நமச்சிவாயா’ என்றும் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது விஜய் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிக்பாஸ் முடிஞ்சதும் நேரா காட்டுக்கு போயிடுவேன்: கமலிடம் சொன்ன போட்டியாளர் யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 98 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருப்பதால் உச்சகட்ட விறுவிறுப்பை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

முதல்முறையாக கண்கலங்கி பாலாஜியிடம் மன்னிப்பு கேட்ட ஆரி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை ஆரியிடம் பாலாஜி மன்னிப்பு கேட்பதை வாரத்திற்கு ஒருமுறையோ, இருமுறையோ வழக்கமாக வைத்திருந்தார் என்று சொல்லலாம்.

எதிர்ல வர்றது எமனா இருந்தாலும் பயப்படக்கூடாது: 'மாஸ்டர்' விஜய்சேதுபதியின் மாஸ் வசனம்

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் வரும் 13ஆம் தேதி பொங்கல் விருந்தாக உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று

மனைவிக்கு வாழ்த்து தெரிவித்த மா.க.பா!

விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவரும், நடிகருமான மா.க.பா தனது மனைவிக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு செய்துள்ள இன்ஸ்டாகிராம் போஸ்ட் வைரலாகி வருகிறது 

வெற்றி பெற்ற சோம்சேகரை அழவைத்த கமல்ஹாசன்!

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் முழுவதும் நடைபெற்ற 'டிக்கெட் டு ஃபினாலே' டாக்ஸ்கில் அதிக புள்ளிகள் எடுத்து முதலிடத்தை சோம்சேகர் பெற்றார் என்றும் அவர் நேரடியாக ஃபைனலுக்கு தேர்வு பெற்றார்