கமல்ஹாசன் குறித்து கால்குலேஷன் செய்த அனிருத்-லோகேஷ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று போட்டியாளர்கள் மற்றும் கமல்ஹாசன் மட்டுமின்றி ஏகப்பட்ட விருந்தினர்கள் திடீரென வருகை தந்து பார்வையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தனர். குறிப்பாக நாகார்ஜுனா திடீரென டிஜிட்டல் திரையில் தோன்றி கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் என்பதும், கமல்ஹாசன் குடும்பத்தினர்கள், கமல்ஹாசனின் மகள்கள் மற்றும் மலையாள நடிகர் மோகன்லால் ஆகியோரும் அவ்வப்போது திரையில் தோன்றி கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் திடீரென பிக்பாஸ் செட்டுக்குள் அனிருத் மற்றும் லோகேஷ் கனகராஜ் வந்து கமல்ஹாசனுடன் உரையாடினார்கள். கமலஹாசன் நடித்து வரும் 232வது திரைப்படமான ’விக்ரம்’ படம் குறித்து இருவரும் கமலஹாசனுடன் உரையாடிய நிலையில் லோகேஷ் கனகராஜ் ஒரு கால்குலேஷனை கமல்ஹாசனிடம் தெரிவித்தார்
66 வயதாகும் கமல்ஹாசன், இதுவரை பல்வேறு மொழிகளில் 231 படங்களில் நடித்து முடித்துள்ள நிலையில் அவர் சுமார் 40 ஆண்டுகள் படப்பிடிப்பு செட்டிலேயே இருந்திருக்கிறார் என்ற கால்குலேஷனை லோகேஷ் மற்றும் அனிருத் தெரிவித்தனர். இந்த கால்குலேஷன் குறித்து தனது மகிழ்ச்சியை கமல் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் நேற்று கமலஹாசனின் ’விக்ரம்’ படத்தின் டைட்டில் ட்ரைலர் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கும் ஒளிபரப்பப்பட்டது என்பதும், அந்த டிரைலரை பார்த்த போட்டியாளர்கள் அனைவரும் கமலஹாசனுக்கு பாராட்டு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments