ஐபோனில் எடுக்கப்பட்ட ஆண்ட்ரியா படம்: ஒருசில நாட்களில் ரிலீஸ்

  • IndiaGlitz, [Monday,April 27 2020]

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக திரைப்படப்படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து திரைப்பட தொழிலாளர்கள் முதல் மாஸ் நடிகர்கள் வரை வேலையின்றி வீட்டில் முடங்கி கிடக்கின்றனர்.

இருப்பினும் வேலை செய்து கொண்டிருந்தவர்களின் கைகள் சும்மா இருக்காது என்பதை நிரூபிப்பதை போல் தற்போது ஐபோனில் ஒரு குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது. ‘மாஸ்டர்’ நடிகை ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த குறும்படத்தின் டைட்டில் ’லாக்டவுன்’

ஆதவ் கண்ணதாசன் இயக்கத்தில் நிதின்ராம் ஒளிப்பதிவில் கார்த்திக் படத்தொகுப்பில் சிவா சவுண்ட் எபெக்ட்ஸில் உருவாகியுள்ள இந்த படத்தின் கெட்டின் ட்ரீம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த குறும்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது என்பதும் அதில் விரைவில் இந்த குறும்படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

காவலர்களுக்கு உணவு வழங்கிய தன்னார்வலருக்கு கொரோனா: சென்னையில் அதிர்ச்சி

சென்னையில் காவலர்களுக்கு உணவு, தேநீர் வழங்கி வந்தவருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவரிடம் உணவு மற்றும் தேநீர் வாங்கிய காவலர்கள் அனைவரையும்

கொரோனாவுக்கு நடுவில் மலேரியா பாதிப்பு!!! இரட்டிப்பு தாக்குதலில் ஜிம்பாப்வே!!!

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கின்றன.

மே இறுதியில் விடிவுகாலம் கிடைக்கும்: பிரபல நடிகரின் லேட்டஸ்ட் வீடியோ

கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை அவ்வப்போது திரையுலகினர் பொதுமக்களுக்கு ஏற்படுத்தி வரும் நிலையில் ஏற்கனவே ஒருசில வீடியோக்களை வெளியிட்டு விழிப்புணர்வு செய்த நடிகர் விவேக் தற்போது

எஸ்வி சேகர் வீட்டில் கெட்டுப்போன பால்: அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை

தமிழகத்தில் தினமும் 50 க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழக அரசு கொரோனா வைரஸிடம் இருந்து மக்களை காப்பாற்ற தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

பிரபாகரன் பெயர் சர்ச்சை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் ஆவேச அறிக்கை!

பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் தயாரித்து நடித்த 'வரனே அவஷ்யமுண்டு' படம் கடந்த பிப்ரவரி மாதம் 7ம் தேதி வெளியான நிலையில்