ஆன்லைனில் ஏமாந்த பிரபல நடிகை: அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வு
Send us your feedback to audioarticles@vaarta.com
தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து பிரபலமான நடிகை சினேகா உல்லல் ஆன்லைன் மூலம் ஏமாந்த சம்பவம் அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வு பாடமாக உள்ளது.
தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து பெரும்பாலும் ஆன்லைனில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையானதை ஆர்டர் செய்து வருகின்றனர். இந்த நிலையில் சினேகா உல்லல் தனது உறவினர்களுடன் மும்பையில் உள்ள பந்த்ரா பகுதியில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் சினேகாவின் உறவினர் சமீபத்தில் ஆன்லைன் குரோசரி ஸ்டோரில் சில பொருட்களை ஆர்டர் செய்துள்ளார். பொருட்களை கொடுத்துவிட்டு பணம் பெற்று கொள்ளும் முறையில் அவர் ஆர்டர் செய்த நிலையில் சில நிமிடங்களில் ஆன்லைன் குரோசரி நிர்வாகத்திடம் இருந்து அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் தங்கள் கடை மூடப்பட்டுவிட்டதாகவும், எனவே குடோனில் இருந்து பொருட்களை டெலிவரி செய்ய உள்ளதாகவும், எனவே முன்னதாகவே பொருட்களுக்கு உரிய தொகையை ஆன்லைனில் செலுத்துமாறும் கூறியுள்ளார்.
இதனையடுத்து சினேகா உல்லலின் உறவினரின் கிரெடிட் கார்ட் விபரங்களை தருமாறும், ரசீதில் அந்த எண்களை பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். குறிப்பிட்ட விபரங்களை கொடுத்த அடுத்த ஒருசில நிமிடங்களில் அந்த கிரெடிட் கார்டில் இருந்து ரூ.25ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் தான் இதுவொரு ஆன்லைன் மோசடியாளரின் வேலை என்றும் தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் இந்த நேரத்தில் அனைவருக்குமான ஒரு விழிப்புணர்வாக உள்ளது. தொலைபேசியில் கிரெடிட் கார்ட் விபரங்களை யார் கேட்டாலும் தரக்கூடாது என்பது இதன்மூலம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது ஆகும்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments