ஊரடங்கு மட்டும் போதாது.. ஒரு வருடம் சமூக விலகல் வேண்டும்..! ஸ்டான்ஃபோர்ட் பேராசிரியர்கள்.
- IndiaGlitz, [Friday,March 27 2020]
உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸானது மக்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவினை எல்லா நாடுகளும் பின்பற்றி வருகின்றன. சீனாவில் இந்த வைரஸ் பரவல் கட்டுப்பாட்டிற்குள் வந்தாலும் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இது நல்ல பலன்களை தரவில்லை.
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக பேராசிரியர்கள் பீட்டர் டீமெர்சோ, ஹானோ லூஸ்டிக், அமித் செரோ போன்றோர் ஊரடங்கு மட்டுமில்லாமல் குறைந்தது ஓராண்டிற்காவது சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களினை முழுமையாக குணப்படுத்த வேண்டும். இதன் மூலம் இந்த வைரஸினை கட்டுப்படுத்த முடியும் என்று கூறியுள்ளனர்.
உரிய மருந்து கண்டுபிடிப்பதும் இதை கட்டுப்படுத்த ஒரு வழி. ஆனால் மருந்து கண்டறியப்படும் வரை கட்டாயம் சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும்.