தமிழகத்தில் தளர்வுகளுடன் ஜூன் 21 வரை ஊரடங்கு நீட்டிப்பு: என்னென்ன தளர்வுகள்?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு ஜூன் 14-ல் முடிவடைவதை அடுத்து சற்று முன்னர் ஜூன் 21 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் மேலும் ஒரு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த தளர்வுகள் பின்வருமாறு
தொழிற்சாலைகள் 33 சதவீதம் பணியாளர்களுடன் விதிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி தொழிலாளர்கள் இருசக்கர வாகனங்களில் பதிவு மற்றும் அடையாள அட்டையுடன் பணிக்கு சென்று வர அனுமதி
செல்போன் மற்றும் அதனை சார்ந்த பொருட்கள் விற்பனைக் கடைகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இயங்கலாம்
வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட அனுமதி
அரசு பூங்காக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்களில் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை நடைபயிற்சிக்கு அனுமதி
உள்ளாட்சி அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள விளையாட்டுத் திடல்களிலும் நடைபயிற்சிக்கு அனுமதி
சலூன்கள், பியூட்டி பார்லர்கள் ஆகியவை ஏசி இன்றி, காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி/ சலூன்கள், பியூட்டி பார்லர்கள் ஆகியவை 50% வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதி
தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்கள் நீங்கலாக, 27 மாவட்டங்களில் மதுக்கடைகள் திறப்புக்கு அனுமதி. சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் செயல்பட அனுமதி
எலக்ட்ரீசியன், பிளம்பர், கணினி பழுது நீக்குவோர், இயந்திரங்கள் பழுது நீக்குவோர் செயல்பட அனுமதி
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments