தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு: என்னென்ன கூடுதல் தளர்வுகள்?
- IndiaGlitz, [Friday,June 25 2021]
தமிழகத்தில் ஜூலை 5ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு செய்துள்ளார். இந்த ஊரடங்கில் வழங்கப்பட்டுள்ள கூடுதல் தளர்வுகள் பின்வருவன்
காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை விளையாட்டு பயிற்சி குழுமங்கள் இயங்கவும் பார்வையாளர்கள் இல்லாமல் திறந்த வெளியில் விளையாட்டு போட்டிகள் நடத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது
சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு மாவட்டங்களில் அனைத்து தனியார் நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்கள் தான் செயல்பட அனுமதிக்கப்படுவார்கள்
துணிக் கடைகள் நகைக் கடைகள் காலை 9 மணி முதல் 7 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் துணிக்கடைகள் மற்றும் நகைக் கடைகள் குளிர்சாதன வசதி இல்லாமல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது
வணிக வளாகங்கள் ஷாப்பிங் மால்கள் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் காலை 9 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்களில் உள்ள உணவகங்களில் பார்சல் மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது
சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கோயில்கள் மசூதிகள் தேவாலயங்கள் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் வழிகாட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது
தொற்று குறைந்த அரியலூர், கடலூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட 23 மாவட்டங்களில் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சாலையோர உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதி!
தீப்பெட்டி தொழிற்சாலைகள் 100 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதி!
தமிழகத்தில் ஜூலை 5 வரையிலான தளர்வுகளில் சினிமா தியேட்டர் திறக்க தமிழக அரசு அனுமதிக்கவில்லை