ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு: திரையரங்குகள் திறக்க அனுமதியா?
- IndiaGlitz, [Friday,July 16 2021]
தமிழகத்தில் ஜூலை 19ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைவதை அடுத்து ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இந்த ஊரடங்கில் ஒரு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் திரையரங்குகள் திறப்பதற்கு தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களுக்கு இடையே தனியார் மற்றும் அரசு போக்குவரத்து, சர்வதேச விமான போக்குவரத்து, திரையரங்குகள், மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள், அரசியல் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்படுவதாகவும், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள், பள்ளி கல்லூரிகள், மற்றும் உயிரியல் பூங்காக்களுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதே நேரத்தில் தொழில் பயிற்சி பெறும் மாணவர்களின் வேலை வாய்ப்பினை கருத்தில் கொண்டு தட்டச்சு சுருக்கெழுத்து பயிற்சி நிறுவனங்கள், தொழில் பயிற்சி நிறுவனங்கள் ஆகியவை 50 சதவீத மாணவர்களுடன் சுழற்சிமுறையில் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ள ஊரடங்கு குறித்த முழு விவரங்கள் இதோ:
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் (31.07.2021) வரை நீட்டிப்பு; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு (1/2)
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) July 16, 2021
#TamilNadu #TNLockdown #CMMKStalin pic.twitter.com/9R4llHtWcj
(2/2) pic.twitter.com/hc44LRlJMt
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) July 16, 2021