தமிழகத்தில் ஜூன்14 வரை ஊரடங்கு நீட்டிப்பு: தளர்வுகள் உண்டா?
- IndiaGlitz, [Saturday,June 05 2021]
தமிழகத்தில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த தளர்வுகள் இல்லாத ஊரடங்கு வரும் 7ம் தேதியுடன் முடிவடைவதை அடைத்து 7ஆம் தேதி முதல் 14ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சற்றுமுன் தெரிவித்துள்ளார்
இந்த ஊரடங்கின்போது இறைச்சி கூடங்கள் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்படும் என்றும் அனைத்து அரசு அலுவலர்களும் 30% பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படும் என்றும் சார்பதிவாளர் அலுவலகங்களில் நாளொன்றுக்கு 50 பத்திரப் பதிவுகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும் என்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50% பணியாளர்களுடன் அனுமதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் தனியாக செயல்படுகின்ற மளிகை கடைகள், பலசரக்கு கடைகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். அதேபோல் காய்கறி, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் அனுமதிக்கப்படும்
கோவை நீலகிரி திருப்பூர் ஈரோடு சேலம் கரூர் நாமக்கல் தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் மட்டும் ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த 11 மாவட்டங்களை தவிர இதர மாவட்டங்களில் நோய்த்தொற்று குறைந்து வருவதை கருத்தில் கொண்டு இந்த தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்