தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா? முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை!

  • IndiaGlitz, [Saturday,May 22 2021]

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மே 10ஆம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஆகிய நிலையிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறையவில்லை என்பதும் நேற்று கூட தமிழகத்தில் 36 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் வரும் 24ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ளதால் ஊரடங்கை நீடிப்பதா அல்லது கூடுதல் கட்டுப்பாடு விதிப்பதா? என்பது குறித்து முதல்வர் இன்று ஆலோசனை செய்ய உள்ளார். முதலில் சட்டமன்ற உறுப்பினர் குழுவுடன் ஆலோசனை செய்யும் முதல்வர் அதன் பின்னர் மருத்துவ நிபுணர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனை செய்ய உள்ளார். இந்த ஆலோசனைக்கு பின்னர் தமிழகத்தில் ஊரடங்கு நீக்கப்படுமா? என்பது குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருவதாலும் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் ஒருநாள் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதாலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று வெளியாகும் அறிவிப்பில் ஊரடங்கு நீட்டிப்பு இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்