தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா? முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை!

  • IndiaGlitz, [Saturday,May 22 2021]

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மே 10ஆம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஆகிய நிலையிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறையவில்லை என்பதும் நேற்று கூட தமிழகத்தில் 36 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் வரும் 24ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ளதால் ஊரடங்கை நீடிப்பதா அல்லது கூடுதல் கட்டுப்பாடு விதிப்பதா? என்பது குறித்து முதல்வர் இன்று ஆலோசனை செய்ய உள்ளார். முதலில் சட்டமன்ற உறுப்பினர் குழுவுடன் ஆலோசனை செய்யும் முதல்வர் அதன் பின்னர் மருத்துவ நிபுணர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனை செய்ய உள்ளார். இந்த ஆலோசனைக்கு பின்னர் தமிழகத்தில் ஊரடங்கு நீக்கப்படுமா? என்பது குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருவதாலும் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் ஒருநாள் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதாலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று வெளியாகும் அறிவிப்பில் ஊரடங்கு நீட்டிப்பு இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 

More News

திரையுலகின் முன்னணி பி.ஆர்.ஓ திடீர் மறைவு: அதிர்ச்சியில் திரையுலகம்!

தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகின் முன்னணி பிஆர்ஓவாக இருந்து வந்த பிஏ ராஜூ அவர்கள் திடீரென காலமானது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

கோவிட் -ஆல்  உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 1 லட்சம்...! வடமாநில அரசு அறிவிப்பு...!

கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 1லட்சம் நிவாரண நிதி அளிக்கப்படும் என மத்திய பிரதேச முதல்வர் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு...! பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசுப்பணி....!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டம் நடத்தியதில், துப்பாக்கிச்சூடு அங்கு நடைபெற்றது.

ஏன் நீங்களும் அஸ்வினும் மேரேஜ் பண்ணக்கூடாது? லாஸ்லியாவிடம் ரசிகர் கேட்ட கேள்வி!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றவர் லாஸ்லியா என்பதும் அவர் தற்போது 'ஃபிரண்ட்ஸ்' உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

நல்ல வேளை ஊசி தெரிகிற மாதிரி போட்டோ இருக்கு: ரம்யா பாண்டியன் தடுப்பூசி புகைப்படத்திற்கு கமெண்ட்ஸ்

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி போடுவது குறித்த விழிப்புணர்வை தமிழக சுகாதாரத்துறை ஏற்படுத்தி வருகிறது.