தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு அறிவிப்பு!
- IndiaGlitz, [Wednesday,January 05 2022]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நாலை முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும், இரவுநேர ஊரடங்கு நேரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகள், உணவகங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் வணிக வளாகங்கள் செயல்பட அனுமதி இல்லை என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
மேலும் தமிழகத்தில் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும், முழு ஊரடங்கான ஞாயிற்றுக்கிழமைகளில் பொது போக்குவரத்து, மெட்ரோ ரயில் உள்பட எதுவும் இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் பால், பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி, ஏ.டி.எம். பேன்ற அவசிய பணிகளுக்கு மட்டும் இரவுநேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கின்போது அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது.