நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல்கட்ட ஊரடங்கு உத்தரவும், ஏப்ரல் 14ஆம் தேதி இரண்டாம் கட்ட ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. மத்திய அரசு பிறப்பித்த இந்த ஊரடங்கு உத்தரவு நாளை மறுநாள் அதாவது மே 3ம் தேதியுடன் முடிவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த இரண்டாம் கட்ட ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்படுமா? அல்லது ஒரு சில மாநிலங்களுக்கு தளர்த்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி நாடு முழுவதும் நடைமுறையில் உள்ள ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என உறுதி செய்யப்பட்ட தகவல்கள் வெளிவந்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி நாடு முழுவதும் மேலும் இரண்டு வாரங்களுக்கு அதாவது மே 17ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டல பகுதிகளில் தளர்வுகள் எதுவும் இல்லை என்றும், பச்சை, ஆரஞ்சு பகுதிகளுக்கு அதிகளவில் தளர்வுகள் இருக்கும் என்றும், சிவப்பு, பச்சை, ஆரஞ்சு என பிரிக்கப்பட்டு அதற்கேற்ப நெறிமுறைகள் அமல்படுத்தப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

More News

ரூ.100 அபாரதம், 14 நாட்கள் தனிமைப்படுத்துதல்: சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஓரளவு கட்டுப்பாட்டில் இருந்தாலும் சென்னையில் மட்டும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

உழைப்பாளர் தினத்தில் என்பது எவ்வளவு பொருத்தம்! அஜித்துக்கு பிரபல நடிகை வாழ்த்து

சமூக வலைத்தளத்தில் கடந்த சில மாதங்களாக அஜித் ரசிகர்களும் நடிகை கஸ்தூரியும் மோதுவது என்பது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. ஒரு கட்டத்தில் அஜித் ரசிகர்கள் எல்லை மீறியபோது

தொழிலாளர் தினத்தில் கமல் வெளியிட்ட சின்னம்: இணையத்தில் வைரல்

இன்று மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் உலக நாயகன் நடிகருமான கமல்ஹாசன் காலையிலேயே தொழிலாளர்களை பெருமைப்படுத்தும் வகையில்

உங்க அம்மா பெட்ரூமுக்கு லாக் போட்டிருந்தா? கஸ்தூரியின் பதிலடியால் அதிர்ச்சியில் ரசிகர்

தமிழகத்தில் இன்னும் இரண்டு நாட்களில் ஊரடங்கு உத்தரவு முடிவடைய இருப்பதால்  மேலும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா? என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இதுகுறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில்

தமிழகத்தில் முதல்முறையாக 200க்கும் மேல் கொரோனா பாதிப்பு: மிக ஆபத்தான நிலையில் சென்னை

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.